Thursday, December 2, 2021

மன்னையின் "மனிதநேய மருத்துவர் Lion Dr. CAK

*சீர் மிகு சீர்காழி யில், சொக்கலிங்கம் பங்கஜம் அண்ணியாருக்கு, சொக்க தங்கமாக 1950ல் பிறந்தார்*.
*1973 ல் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜியில் MBBS, படிப்பு, 1976 ல் M.S.பட்டம், மருத்துவம் பயின்றவர், மன்னார்குடி அரசு மருத்துவமனை யில் மருத்துவராக பணிபுரிந்தார்! இவர் பணிபுரிந்த காலத்தில்,நோயாளிகள் மற்ற டாக்டர்களிடத்தில் சிகிச்சை க்கு செல்லாமல்,இவரிடம் சிகிச்சை பெற நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறுவார்களாம்!* 

*மருத்துவமனை அலுவல் நேரம், முடிந்தாலும் கூட, நோயாளிகளுக்கு கால நேரம், பார்க்காமல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவாராம் !*
 
*மருத்துவ தொழிலின் சிறப்பு! நோயாளிகளிடத்தில் அரவணைப்பு! கனிவுடன் ஆறுதல்! இதுவே இவரது தனிப்பட்ட உயர்வு!*  

*தனது மருத்துவ சேவைகளை விரிவாக்கும் வடிவத்தில், முப்பது ஆண்டுகளுக்கு முன் (1991ல்) தான் வசிக்கும் மன்னார்குடி யில், CAK பல நோக்கு மருத்துவமனையை ஆரம்பித்து, குறைவான கட்டணத்தில், தரமான சிகிச்சை அளித்து வருகிறார்!*

*நாடியை பிடித்துப் பார்த்து, கோடிகளை குவித்து வரும் மருத்துவ துறையில், நாடியை பிடித்து சிகிச்சை அளித்து, கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்*
 
*மக்கள் இவரது மருத்துவமனையை கோவிலாகவும், மருத்துவரை (நடமாடும்) தெய்வமாகவும் தான் பார்க்கிறார்கள்*!

*மன்னையை சுற்றியுள்ள, நரிக்குறவர் சமுதாய மக்களின் குடும்ப டாக்டர் இவர் தான் என்றால், நீங்கள் நம்ப வேண்டும்!* *கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை! முப்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை ஒரு ரூபாய் கூட வாங்காமல் சேவை!* அதனால் தான், *இவர் மன்னையின் "மனிதநேய மருத்துவர்" மட்டுமல்ல, மருத்துவத்தில் முடி சூடிய மன்னர்!* *இது வரை இவர் செய்த அறுவை சிகிச்சை களின் எண்ணிக்கை சுமார் இரண்டு லட்சம்!* *அத்தனை யும் சக்ஸஸ்! காரணம் கைராசி!* 
*குடந்தை டாக்டர் எஸ். தியாகராஜன் சேவை மனதுடன் செய்து வரும், "முற்றியநிலை புற்றுநோயாளிகளின் புகலிடமான, "அன்னை ஆதுரகம்" இவர்களும் ஒரு நிர்வாகி!* 

*அரிமா சங்கத்தில் ஆயுள் உறுப்பினர் (PMJF LION) அணிசேரா ஆளுனர்!* *ஆளுமை திறன் மிக்க ஆளுனர், ஆனாலும், அதில் விருப்பம் இல்லை! காரணம் தனது மருத்துவ சேவை! பாதிக்கும் என்பதால்!*
*செஞ்சிலுவை சங்கம் ஆயுள் உறுப்பினர்,IMA- ஆயுள் உறுப்பினர், ASI-ஆயுள் உறுப்பினர்,FO&GYS- ஆயுள் உறுப்பினர், YMCA-ஆயுள் உறுப்பினர், மன்னார்குடி கலைவாணி சபா தலைவர்!கராத்தே சங்க தலைவர், பளுதூக்கும் சங்க தலைவர்! நமது சமூக சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்கள்!*

*மன்னார்குடியில், நமது சமூக சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றால் அதற்கு காரணம் இவர்கள் தான், என்று நான் குறிப்பிட வேண்டியதில்லை!* 
*நமது சமூக மக்களுக்கு பல சங்கம் மூலமாக கல்வி,திருமண உதவிகளை செய்து வருகிறார்கள்*!

*நாடகத்தில் நடிப்பாற்றல் உள்ள இவர், நோயாளிகளிடத்தில் நடிக்க தெரியாதவர்!* 
*ஆல் இண்டியா ரேடியோவில் டிராமா ஆர்ட்டிஸ்ட்! இவரது மாமா டாக்டர் ராஜகோபால் அவர்கள் தான், இவரது வழிகாட்டி என்று பெருமிதத்தோடு கூறும், இவர், தனது மனைவி திருமதி சங்கீதா அசோக் குமார் தான் (டாக்டரின்) தனது சேவை க்கும், வெற்றி க்கும் பக்கபலமாக இருப்பதை சொல்லும் போது , மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்! என்று மனம் மகிழ்ந்து பாராட்டுவோம்!* *இவர்களுக்கு மகன் தீபக், மகள் ஆர்த்தி என இருவாரிசுகள்! அனைவருக்கும் இனிதே திருமணம் நடைபெற்று,சென்னை யில் வசித்து வருகின்றனர்!